Open 10 am to 4 pm
Open 10 Am to 4 Pm

PCOD in Tamil : எவ்வாறு சீர் செய்வது?

PCOD in tamil

PCOD in Tamil : கருவுற இயலாமை

PCOD in Tamil : இல்லற வாழ்க்கையில் இணைந்து ஒரு வருடத்திற்கு மேலாகியும் கருவுற இயலாமை என்பது பல தம்பதியரின் பிரச்சனை.விரைவில் கருவுற வேண்டும் என்ற ஏக்கம். உண்மையில் இது ஏக்கம் மட்டுமல்ல. சமூகம் தரும் புற அழுத்தத்தினால் உருவான பதட்டமும் சேர்ந்த உணர்வு. திருமணமாகி ஒருவருடம் ஆகியும், இருவரும் ஓரிடத்தில் வசித்து, தொடர்ந்து இணை சேர்ந்தும், இயற்கையாக கருவுறுதல் நிகழாமல் போவதை “ஆரம்ப நிலை கருவுற இயலாமை” என்கிறோம்.

கர்ப்பம் தரிக்க, என்னென்ன அவசியம் ? PCOD Tamil

ஆரோக்கியமான பெண்

கர்ப்பம் தரிக்க, பெண்ணிடம் இருந்து கருமுட்டை, ஆணிடம் இருந்து விந்தணு தேவை. பெண்ணிற்கு போதுமான அளவு கருமுட்டைகள் இருக்க வேண்டும். மாதம் ஒருமுறை ஒரு வளர்ந்த கருமுட்டை உடைந்து வெளியேற வேண்டும்.
வெளியேறிய கருமுட்டை, கர்ப்பபைக்கு எந்தத் தடையும் இன்றி வந்து சேர வேண்டும்.
இவையனைத்துக்கும் உதவு வகையில் ஹார்மோன்களின் சுரப்பு இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான ஆண்

ஆணைப் பொருத்தவரை விதைப்பையில் விந்தணுக்கள் போதுமான அளவில், விந்து அதன் அங்கங்கள் சரியானதாகவும் முன்னோக்கி முன்னேறிச் செல்லும் வகையிலும் உற்பத்தி இருக்க வேண்டும். விந்தணு வரும் வழியில் அடைப்பு இருக்கக்கூடாது. இணை சேரும் போது ஏற்படும் விரைப்புத் தன்மை சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடாது. இவற்றை அனைத்தையும் ஆராயும் வண்ணம் பரிசோதனைகள் உள்ளன.
  • ஹைப்பர் ஆண்ட்ரோஜெனிசம்
    ( ஆண் ஹார்மோன் அதிகமாக இருப்பது – முகத்தில் மீசை தாடி வளர்ச்சி இருக்கும் – ஹிர்சுடிசம் என்கிறோம்)
  • கருமுட்டை வளர்ச்சி/வெளியேறுதல் கோளாறு (இது மாதவிடாய் காலத்தில் நிகழ வேண்டிய ஹார்மோன்களின் ஏற்ற இறக்கங்களில் வரும் கோளாறு)
  • ஸ்கேனில் பாலி சிஸ்டிக் (நீர்க்கட்டிகள்) தென்படுவது ஒரே நேரத்தில் பல கருமுட்டைகள் போதுமான வளர்ச்சி அடையாமல் இருக்கும் போது மாலை போல நீர்க்கட்டி தோற்றமளிக்கும்)
  • இவ்வாறு பெண்களுக்கு PCOD in Tamil வெளிப்படுகிறது 

 

PCOD in Tamil : 4 வகைகள்

மேற்சொன்ன மூன்று விஷயங்களும்
வெளிப்படும் விதத்தை வைத்து
PCOD in Tamil நான்கு வகையில் வெளிப்படுகிறது.

  • A டைப் – முற்றிய பிசிஓடி – இவர்கள் உடல் பருமனாக OBESE PCOD இருப்பார்கள்.
    இவர்களுக்கு மேலே சொன்ன மூன்று பிரச்சனைகளும் ஒருங்கே இருக்கும்
    இந்த வகை தான் பெரும்பான்மையினருக்கு ஏற்படும் பிரச்சனையாக உள்ளது.

  • B டைப் – ஸ்கேனில் நீர்க்கட்டி இல்லாத பிசிஓடி – இவர்களுக்கு ஆண் ஹார்மோன் அதிகமிருக்கும் அதனால் மீசை, தாடி, பருக்கள், தலைமுடி லேசாகுதல் இதனுடன் கூடவே மாதவிடாய் சுழற்சிக் கோளாறு இருக்கும்.

  • C டைப் – மாதவிடாய் சுழற்சி சீராக இருக்கும் பிசிஓடி –
    இவர்களுக்கு மாதவிடாய் சுழற்சி நார்மலாக இருக்கும். ஆனால் ஆண் ஹார்மோன் அதிகமாகி ஹிர்சுடிசம், கூடவே ஸ்கேனில் நீர்க்கட்டி இருக்கும்.

  • D டைப் – LEAN PCOD இவர்களுக்கு பீரியட்ஸ் நார்மலாக இருக்காது. ஸ்கேனில் பிசிஓ இருக்கும். ஆனால் முகத்தில் பரு/ தாடி/ மீசை இருக்காது. இவர்கள் ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார்கள். அதனால் இந்த வகையை லீன் பிசிஓடி என்று அழைக்கிறோம்.

PCOD in Tamil : தீர்வு

PCOD நோய் தீர்க்கும் தாரக மந்திரங்கள்.
எடை அதிகமாக இருக்கும் பெண்கள் எடை குறையுமட்டும்/ குழந்தைப்பேறு அடையுமட்டும் குறை மாவு நிறை கொழுப்பு உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.
அதிக மாவுச்சத்துள்ளதும் தானிய வகைகளை
தவிர்த்து விடுதல் நல்லது. பால் பருகுவதை தவிர்த்தல் நலம்.
ஜங்க் ஃபுட்ஸ், குளிர் பானங்கள் , எண்ணெயில் தீக்குளித்த உணவுகள் கட்டாயம் சாப்பிடக்கூடாது.
தினமும் உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய வேண்டும்.
கறி, முட்டை, மீன் உணவுகளை அதிகம் உண்ண வேண்டும்.
காய்கறிகள், கீரைகளை, பழங்கள், nuts போன்றவற்றை அதிகம் உண்ணவேண்டும்.

LEAN PCOD தங்களது எடையை மெய்ன்டெய்ன் செய்ய தேவைக்கேற்ற மாவுச்சத்தை கஞ்சி வடிகட்டப்பட்ட சாதம், பழங்கள், காய்கறிகள் , கீரைகளை அதிகமாக உண்டு பெற வேண்டும்.

நல்ல உடற்பயிற்சி தேவை
மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளும் எடுக்க வேண்டும். (எடை குறைவாக LEAN PCOD இருப்பவர்களுக்கு மெட்பார்மின் மாத்திரை நன்கு வேலை செய்யும். ஆகவே சிகிச்சையில் மாத்திரையின் பங்கு மிக முக்கியமானது)

தினசரி விட்டமின் டி அளவுகள் சரியாக கிடைக்க வேண்டும்

PCOD என்பது மிக எளிதாக சரசெய்யக்கூடிய நோயாகும்.
தேவை நல்ல உணவு முறையும் சரியான சிகிச்சையும் தான்.
குறை மாவு உணவு முறை மற்றும் உடற்பயிற்ச்சியுடன் கூடிய வாழ்வியல் பிசிஓடிக்கான தீர்வை வழங்கவல்லது.
முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது.
fertility hospital in Nagercoil

Frequently asked doubts

FAQ

ஆம், PCOD இருந்தாலும் சரியான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்புடன் கர்ப்பம் தரித்துக்கொள்ள முடியும்.

மருந்து,  உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம், மற்றும் பயிற்சிகள் தான் இதற்க்கு தீர்வு

96268 93006 என்ற எண்ணுக்கு whatsapp அனுப்பவும்

கீத் IVF-ல், குறைந்த செலவில் கருத்தரித்தல் சிகிச்சைகளை பெறலாம்.

⭐ 4.9-ஸ்டார் கூகிள் ரெவியூ ⭐
ஆயிரக்கணக்கான தம்பதிகள் எங்கள் மருத்துவமனையை நம்பி குழந்தை பெற்றுள்ளார்கள்.
இப்போது, உங்களின் தருணம்!

ஏன் கீத் IVFல் சிகிச்சை பெற வேண்டும்?

✅ அதிகமான Google Reviews
✅ உயர்ந்த வெற்றிப் பதிவு
✅ குறைந்த செலவில் கருத்தரித்தல் சிகிச்சைகள்

📍 களியாக்கவிளை, கன்யாகுமரி

உங்கள் இலவச ஆலோசனையைப் பெற WhatsApp பொத்தானை கிளிக் செய்யவும்.