Open 10 am to 4 pm
Open 10 Am to 4 Pm

PCOD Diet Tamil : தமிழ் PCOD டையட்

PCOD Diet Tamil  வழிகாட்டி. பொலிசிஸ்டிக் ஓவேரி டிசார்டர். PCOD நிலையை சமாளிக்க உணவுக்கட்டுப்பாடு மிகவும் முக்கியம். இந்த வழிகாட்டியில், PCOD க்கான உணவுகள், மற்றும் எளிமையான  பயனுள்ள உணவு Diet Chart உள்ளடக்கமாக இருக்கின்றன. உங்கள் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும், ஒவுலேஷனை மேம்படுத்தவும்,  இந்த டயட் பயனளிக்கும். For an English article, Click on PCOD Diet.

PCOD diet tamil

Download PDF on PCOD Diet Tamil

PCOD என்றால் என்ன?


Polycystic Ovary Disorder – PCOD என்பது  ஹார்மோன்கள் பாதிப்பால், பெண்களுக்கு ஏற்படும் ஒரு நிலையாகும். மாதவிடாய் சுழற்சி முறைகேடு, முகத்தில் முடி வளர்ச்சி, இரத்தத்தில்,  சர்க்கரை அதிகரிப்பு, உடல் பருமன் போன்ற பல சிக்கல்களை ஏற்படுத்தும். இது இன்ஸுலின் எதிர்ப்பு, INSULIN RESISTANCE உடன் தொடர்புடையது.

PCOD Diet Tamil உணவு முறையை பின்பற்றினால், இந்த அறிகுறிகளை சமாளிக்க முடியும்.

Importance of Diet in PCOD
உணவுமுறையின் முக்கியத்துவம்

  • சரியான உணவுகள் ஹார்மோன்களை சீரமைக்க உதவும்.

  • இன்ஸுலின் எதிர்ப்பை குறைக்கும்.

  • உடல் எடையை சீராக்கும்.

  • ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

 PCOD Diet Tamil வழியாக சரியான உணவுகளை தெரிந்து கொண்டு செயல்படுங்கள்.

Nutrients for PCOD
முக்கியமான ஊட்டச்சத்துகள்

 

Nutrient

Benefit

பயன்

Fiber

Controls blood sugar

நார்ச்சத்து – பசியை கட்டுப்படுத்தும்

Omega-3

Anti-inflammatory

ஓமேகா-3 – வீக்கத்தைக் குறைக்கும்

Vitamin D

Improves insulin sensitivity

வைட்டமின் டி – இன்ஸுலின் செயல்திறன்

Magnesium

Stress reduction

மக்னீசியம் – மன அழுத்தம் குறைக்கும்

Chromium

Balances blood sugar

குரோமியம் – சர்க்கரையை கட்டுப்படுத்தும்

Foods to Include in a PCOD Diet
சேர்க்க வேண்டியவை

கீரை வகைகள்

பருப்பு வகைகள்

முட்டை, சிக்கன், மீன்

அவகாடோ, ஸ்ட்ராபெரி

தேங்காய் எண்ணெய், நெய்

வெண்டைக்காய், பாகற்காய், பூண்டு

லெமன், நார்த்தங்காய்

ப்ரொக்கொலி, முட்டைக்கோஸ்

Foods to Avoid in a PCOD Diet
தவிர்க்க வேண்டியவை

  • அரிசி, கோதுமை, ஓட்ஸ், மைதா

  • இனிப்பான பழங்கள் (வாழை, மாம்பழம், திராட்சை, சப்போட்டா, முலாம்பழம், அன்னாசி, அத்திப்பழம், லிச்சி, பலாப்பழம், Dates etc)

  • பனங்கற்கண்டு, தேன், சர்க்கரை

  • உருளைக்கிழங்கு, சேனை, வாழைக்காய்

  • ப்ரொசஸ்டு பாக்கெட் சாப்பாடுகள்

  • இனிப்பு பானங்கள்

PCOD Diet Tamil திட்டத்தில் இந்த உணவுகள் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும்.

Food Chart for PCOD
மாதிரி உணவுத் திட்டம்

காலை உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று

  • வேகவைத்த முட்டை / ஆம்லெட் – 4 முட்டைகள்
    அல்லது
  • பாதாம்/ வேகவைக்கப்பட்ட நிலக்கடலை –100 கிராம்

 

மதிய உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று

  • சிக்கன்/மட்டன்/மீன்) – 300 கிராம் (வருவல் /குழம்பு/சுக்கா எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம் – எண்ணெயில் Deep fry வேண்டாம்)
    அல்லது
  • பனீர் புர்ஜி – 200 கிராம்
    அல்லது
  • வெந்த கீரை, கொண்டைக் கடலை, பீன்ஸ், பருப்பு – 300 கிராம் (வேகவைத்த எடை)

இரவு உணவு: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று

  • வெள்ளரிக்காய் – 300 கிராம் (உப்பு, மிளகு சேர்த்து)
    அல்லது
  • காரட் – 150 கிராம்
    அல்லது
  • 300 கிராம் காய்கறி/காளான் (கூட்டு, பொரியல்)


நடுவில் சிற்றுண்டி: கீழ்காணும் உணவுகளில் ஏதேனும் ஓன்று

  • வெள்ளரிக்காய் (எவ்வளவு வேண்டுமானாலும்) / காரட்
  • பழங்கள் – அவகாடோ / கொய்யா மட்டும்
  • Dry fruit, ஜூஸ் கூடாது
  • சர்க்கரை இல்லாமல் கிரீன் டீ / எலுமிச்சை டீ / பிளாக் டீ / காபி
  • சர்க்கரை இல்லாமல் பால் – 100 ml
  • சூப்
  • இனிப்பு இல்லா எலுமிச்சை சாறு / நெல்லிக்காய் சாறு – உப்புடன்
  • முந்திரி /பூசணிக்காய் விதை/சூரியகாந்தி விதை– 20 கிராம்
  • தேங்காய் துண்டுகள் – 20 கிராம்
  • சீஸ், கூடுதல் முட்டை, கொய்யா, வெள்ளரிக்காய்

PCOD Diet Tips

  • 12 மணி நேரத்தில் உணவு முடித்து, 12 மணி நேரம் உண்ணாத நேரம் வைத்திருங்கள்

  • 🔥 Deep Fry தவிர்க்கவும்

  • 📅 15 நாட்கள் கழித்து எடை பாருங்கள்

  • 🧑‍⚕️ மருந்துகள் தொடரலாம் – உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை அவசியம்

Location : Fertility Treatment in Trivandrum

Free Consultation : Best Infertility Hospital in Trivandrum

Best IVF Specialist in Trivandrum
Dr.Vinodhini Pradeep
MBBS, D.G.O., D.L.S., D.M.A.S., F.M.A.S.,
Dip in Ultrasound, Dip. Reproductive Medicine (Kiel, Germany)

Dr. Vinodhini Pradeep is the Founder and Director of Gheeth IVF, recognized for Best Fertility Treatment in Trivandrum.

Download PCOD Diet Guide

WhatsApp இல் தொடர்பு கொள்ள

Click the Whatsapp Button below to download PCOD guide in Tamil.