fbpx
Gheeth IVF logo
9626893006
Open 10 am to 4 pm
IVF Treatment in Tamil – Understanding the process.

IVF Treatment in Tamil

IVF Treatment in Tamil : நவீன அறிவியல் மருத்துவத்தின் முக்கியமான கண்டுபிடிப்பாக அடையாளம் காணப்படும் இந்த மருத்துவ முறையின் பெயர் INVITRO FERTILISATION அதாவது சுருக்கமாக “IVF”

IVF in Tamil என்றால் ஆய்வகத்தில், ஒரு ஆணின் விந்தணுவுக்கும், பெண்ணின் முட்டைக்கும் கலப்பு நேர்ந்து கரு உருவாகி, அதை மீண்டும் பெண்ணின் கர்ப்பபைக்குள் பாதுகாப்பாக வைத்து பத்து மாதம் அவள் சுமந்து குழந்தையாக ஈன்றெடுப்பதே இந்த முறையாகும்
 

இயற்கையாக கருத்தரித்தல் : IVF Treatment in Tamil

ஆணும், பெண்ணும் பாதுகாப்பற்ற உடலுறவில், சில காலம் கலந்திருந்தால் இனப்பெருக்கம் நிகழும்.

ஆணின் விந்தணு பெண்ணின் ஜனனக்குழாய் வழியே உள்சென்று கருப்பையைக் கடந்து, கர்ப்பக்குழாயில் தனக்கென காத்திருக்கும் முட்டையுடன் இரண்டறக் கலந்து கருவாக உருவாகும்.

அந்த கரு மெதுவாக நகர்ந்து வந்து கர்ப்பபையில் பதியம் வைக்கப்பட்டு சிசுவாக வளரும். இது இயற்கையாக நிகழக்கூடிய ஓன்று.  

இருப்பினும் சில தம்பதியினருக்கு இவ்வாறு இயற்கையாக கருத்தரித்தல் செய்ய இயலாத நிலை ஏற்படுகின்றது. IVF Treatment in Tamil

பெண்ணின் வயது தாயாகும் வாய்ப்புகளை பாதிக்கிறது

பெண்களுக்கு வயது கூடக் கூட அவர்களது சினைப்பையில் முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை குறைந்து கொண்டே வரும்.

அதிலும் 35 வயதுக்கு மேல் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியவை விரைவாக குறைகின்றன.
ஆண்களுக்கு அனுதினமும் புதிதாக விந்தணு உற்பத்தி ஆகுவது போல், பெண்களுக்கு இல்லை.


பெண்கள் தாங்கள் தாயின் கருவறையில் இருக்கும் போதே, சுமார் பத்து லட்சம் முட்டைகளுடன் பிறக்கின்றனர்.
அவர்கள் பூப்பெய்தும் பருவ வயதை அடையும் போது, அது மூன்று லட்சமாக இருக்கின்றது.
அந்த மூன்று லட்சம் முட்டைகளுள், சிறந்த 300 முதல் 400 முட்டைகளே, அவர்களது இனப்பெருக்க காலம் முழுவதும் பிரதிமாதம் வெளியேறுகின்றது.
மாதவிடாய் சுழற்சி இதையே பரைசாற்றுகின்றது.


இப்படி பிரதிமாதம் ஒரு முட்டை வெளியேறி வந்து சினைக்குழாயில் சில நாட்கள் காத்திருக்கும்.

அந்த முட்டையை, விந்தணு வந்து சேர்ந்து கருத்தரித்தல் நடக்காவிடில், மாதவிடாயாக வெளியிறிவிடும்.


விந்தணுவுடன் சேர்க்கை நிகழ்ந்தால், கர்ப்பபையில் கரு உண்டாக ஆரம்பிக்கும்.

பெண் கருவுறாமைக்கான காரணங்கள்

சில பெண்களுக்கு இளவயதிலேயே சினைப்பையானது முறையாக முட்டைகளை வளர்ச்சி அடையச்செய்வதில் குறைபாடு அடைகின்றன. இதை Premature Ovarian Failure என்று அழைக்கிறோம்
இத்தகைய பெண்களுக்கு பிரதிமாதம் முறையாக ஒரு முட்டை உருவாகி வெளியே வராது.
இதனால் அவர்களால் இயற்கையான முறையில் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாக இருக்கின்றது.
இந்த Premature ovarian failure இருக்கிறது என்பதை பெண்களிடம் செய்யப்படும் AMH (Anti Mullerian Hormone ) பரிசோதனை மூலம் அறிய முடியும்.
AMH அளவுகள் 1 என்ற அளவுக்கு கீழ் இருந்தால் அவர்களது சினைப்பையில் தரமான முட்டைகள் இல்லை என்று பொருளாகின்றது.
தரமான முட்டைகள் இல்லாத இடத்தில் இருந்து முறையாக முட்டைகள் உருவாகி வெளியேறாது.
மேலும் சில பெண்களுக்கு பிறவியிலேயேவோ அல்லது சினைக்குழாயை தாக்கும் நோய் தொற்றுகளின் காரணமாகவோ
இருபக்க சினைக்குழாயும் அடைப்பு ஏற்படுகின்றது. இதை bilateral Fallopian tube blockage என்று கூறுகிறோம்.இதற்கு Fallopian Tube Recanulation என்ற சிகிச்சை இருந்தாலும், அது பலருக்கும் எளிதில் கைகூடுவதில்லை.

ஆண் மலட்டுத்தன்மைக்கான காரணங்கள்

ஆண்களில், சிலருக்கு விந்தணு உற்பத்தியில் குறைபாடு இருக்கின்றது. இதை oligospermia என்று அழைக்கிறோம்.
அல்லது, உற்பத்தி சிறப்பாக இருந்தாலும், அவை நகர்தலில் (Motility defect) பிரச்சனை இருக்கின்றது.
அதில் பலருக்கு விந்தணுவின் தன்மையில் (Structural defect) குறைபாடு இருப்பதைக் காண முடிகின்றது.
இவ்வாறான பிரச்சனை இருப்பவர்களுக்கு IVF சிகிச்சை நல்ல பலனைத்தருவது கண்கூடு.

IVF Treatment in Tamil சிகிச்சையில் என்ன செய்யப்படுகின்றது?

பெண்ணின் மாதவிடாய் நிகழ்ந்த இரண்டாவது நாள் முதல் பத்தாவது நாள் வரை,
அவளது சினைப்பையில் நன்றாக முட்டைகள் வளர்வதற்கு நாளொரு ஊசி போடப்படுகின்றது.
இதை FSH(Follicle Stimulating Hormone) என்று அழைக்கிறோம்.
இதன் விளைவாக முட்டைகள் நன்றாக வளர்ந்து வரும்.
அந்த முட்டைகளில் சில இடுப்பில் ஊசி செலுத்தி வெளியே எடுக்கப்படுகின்றன.

அதே சமயம், கணவனிடம் இருந்து விந்தணு பெறப்படுகின்றது.
இந்த முட்டைகளில் முக்கியமான சிலவற்றை எடுத்து,
தனித்தனியாக பெட்ரி டிஷ் எனும் ஆய்வக தட்டில் வைத்து,
விந்தணுக்குளை அவற்றின் மீது தூவுகின்றனர்

விந்தணுக்குள் சுயமாகவே சினைமுட்டையின் வெளிப்புற சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று கருத்தரித்தல் நிகழ்கின்றது.

IVF Treatment in Tamil - ICSI என்றால் என்ன?

ஆணின் விந்தணு, பெண்ணின் கருமுட்டையுடன் சேராமல் இருக்குமானால்,
ஆணின் விந்தணுவை எடுத்து, பெண்ணின் முட்டைக்குள் செலுத்தும் முறை செய்யப்படுகின்றது.
இதற்குப் ICSI-Intracytoplasmic Sperm Injection என்று பெயர்.

இவ்வாறு உருவான கருமுட்டை இரண்டு முதல் நான்கு நாட்களுக்குள் தாயின் கர்ப்பபைக்குள் செலுத்தப்படுகின்றது
தாயின் கர்ப்பபையில் அந்த கருவானது, இயற்கையாக வளர்ந்து குழந்தை பத்தாவது மாதம் பிறக்கின்றது.
இதுவே IVF எனப்படும் டெஸ்ட் ட்யூப் IVF Treatment in Tamil முறையாகும்.

 

IVF Treatment in Tamil சக்ஸஸ் ரேட் எவ்வளவு?

பொதுவாக, மூன்றில் ஒரு முயற்சி வெற்றி பெரும்.
என்னதான் நாம் வெளியே கருவாக்கி உள்ளே கர்ப்பபையில் வைத்தாலும் சில நேரங்களில் கர்ப்பபையில் பதியம் வைத்தல் நிகழாமல் அபார்சனாகி விடும் வாய்ப்பு ஏற்படுகின்றது.
மேலும் பெண்களுக்கு தற்போது உடல் பருமன் / சினைப்பை நீர்க்கட்டி நோய் (Polycystic ovarian disease) போன்ற பிரச்சனைகள் இருப்பதும் சிகிச்சை தோல்விக்குக் காரணமாகின்றன. கீத் IVF இல் எங்கள் வெற்றி விகிதம் 85%.
உடல் பருமன் /PCOD இருப்பவர்கள் குறை மாவு பேலியோ உணவு முறையை கடைபிடித்து எடையைக்குறைத்தால் IVF இன் சக்சஸ் ரேட் கூடலாம்.

IVF Treatment in Tamil க்கு எவ்வளவு செலவாகும்?

IVF முறையில் இனப்பெருக்கத்திற்கு குழந்தைபிறப்பிற்கு முயலும் போது ஒரு சுழற்சிக்கு (One cycle) ரூபாய் இரண்டரை லட்சம் செலவாகின்றது
மாதவிடாய் ஏற்பட்ட இரண்டாவது நாளில் இருந்து பத்தாவது நாள் போடப்படும் விலை உயர்ந்த FSH ஊசிகள்,
முட்டையை வெளியேற்ற உபயோகிக்கப்படும் HCG ஊசி, முட்டையை வெளியே எடுக்க செய்யப்படும் சிகிச்சை, விந்தணுவையும் முட்டையையும் ஒன்றாகச் சேர்க்க செய்யப்படும் ஆய்வக முயற்சி, உருவான கருவை ஆய்வகத்தில் பாதுகாப்பான முறையில் Blastocyst என்ற கட்டம் வரை வளர்ப்பதற்குண்டான இன்குபேட்டர் செலவு, பிறகு கருவை மீண்டும் பத்திரமாக கர்ப்பபைக்குள் வைப்பது வரை இந்த செலவுகளுக்கான காரணங்களாகின்றன
IVFக்கு Gheeth IVFல் 1 லட்சத்து எண்பதாயிரம் மட்டுமே செலவாகும் என்பதையும் பதிவு செய்கின்றேன்.

IVF Treatment in Tamil முடிவுரை

ஒரு கோடி பெண்கள், தாங்கள் விரும்பிய தாய்மை எனும் பந்தத்தை அடைய உதவிவரும் இந்த அறிவியல் முன்னேற்றம் உள்ளபடி பலர் வாழ்வில் மகிழ்ச்சியை தருகின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
தேவையிருப்பவர்கள், வாய்ப்பிருப்பவர்கள், இந்த மருத்துவ முறையை பயன்படுத்தி குழந்தைப்பேறு பெற முடியும் என்பதற்காக இந்த IVF Treatment in Tamil பதிவு
 
Experience. Care. Innovation.
0

Years of Experience

0 +

Happy Mothers

0 %

Exceptional Results

0 +

Awards Won

Experience. Care. Innovation.

0

Years of Experience

0 +

Happy Mothers

0 %

Proven Success Rate

0 +

Awards Won

best infertility center

Frequently asked doubts

FAQ

VF (ഇൻ വിറ്റ്രോ ഫർട്ടിലൈസേഷൻ) ഒരു പ്രജനന ചികിത്സയാണ്, അണ്ഡം പുറത്തെടുത്ത് പരീക്ഷണശാലയിലോ പ്രക്രിയാവതരണത്തിൽ ആൺ ജീവാണുക്കൾക്കൊപ്പം സംയുക്തം ചെയുന്നത്.

Gheeth IVF-ൽ, IVF ചികിത്സയുടെ വിജയം 85% ആണ്

IVFയ്ക്ക് ചെറിയ സൈഡ്ഇഫക്റ്റുകൾ ഉണ്ടാകാം, ഉദാഹരണത്തിന് അസ്വസ്ഥത, പിണക്കം, അമിത അണ്ഡപിണ്ഡ ഉത്തേജനം.

BOOK A FREE CONSULTATION!

For any doubts Whatsapp us on 9626893006

BOOK A FREE CONSULTATION!

Are you Married and Facing Infertility Problems?

Book your appointment today!
Easy Zero Interest EMI Plans
No need to worry, your data is 100% Safe with us!
Click Here to Chat
Scan the code
Welcome to Gheeth IVF Hospital