Infertility meaning in Tamil : குழந்தை பிறப்புக்கும் பாவ புண்ணியங்களுக்கும் சம்பந்தமில்லை
நல்லவருக்கு குழந்தை பிறக்கும். தீயவருக்கெல்லாம் குழந்தை பிறக்காது என்று நம்புவது தவறு
குழந்தை பிறப்பு என்பதற்கு சிலர் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. சிலருக்கு சீக்கிரம் குழந்தை உண்டாகி விடுகிறது. அவ்வளவு தான்
மகப்பேறின்மைக்கு பல அறிவியல் காரணங்கள் உண்டு
அல்லது
இணையர் இருவரும் மனமொப்பி மகப்பேறை சற்று தள்ளிப்போடலாம் என்றும் முடிவு செய்திருக்கலாம். இதில் ஒருவர் நல்லவர் தீயவர் என்ற காரணங்கள் இல்லவே இல்லை
இவ்வுலகில் 100% நல்லவரும் யாருமிலர். 100% கெட்டவரும் யாருமிலர்
ஒருவருக்கு நல்லவராக இருப்பவர, இன்னொருவருக்கு கெட்டவராக இருக்கலாம்
அதே நபருக்கு, ஒரு காலத்தில் நல்லவராக இருந்தவர், இப்போது கெட்டவராக இருக்கலாம். இதையெல்லாம் மகப்பேறின்மைக்கு காரணங்களாக கூறுவது அபத்தம்
ஆண் பெண் ஒன்றுகூடல் நிகழ்ந்தால், கரு தோன்றுவது இயற்கை.
இந்த இயற்கை சிலருக்கு சில மாதங்களிலும் சிலருக்கு சில வருடங்களிலும் நடக்கலாம்.
எனினும் ஆண் பெண் இணையர் ஒன்றாக கூடி வாழ்ந்து அன்பு செய்து தொடர்ந்து ஒரு வருடம் இணை சேர்ந்தும் மகப்பேறு உண்டாகாவிடில், அவர்கள் நாட வேண்டியது
மகப்பேறு மருத்துவரை.
மகப்பேறு தள்ளிப்போகும் இணையர், இது போன்ற நல்லவர் தீயவர் கருத்துகள் , பாவ புண்ணியக் கணக்குகள் போன்ற விசயங்களினால் எவ்வளவு மன உளைச்சலுக்கும்,
மன அமைதியின்மைக்கும் ஆளாவார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
எக்காரணம் கொண்டும் மகப்பேறு தள்ளிச் செல்பவர்களை, நம் சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்தும் வேலையைச் செய்யக்கூடாது.
மகப்பேறு தள்ளிச்செல்பவர்கள் தங்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லையே என்ற கவலைப்படுவதை விடவும், இந்த சமூகத்தின் ஏச்சு பேச்சுக்கும் கேலிக்கும் புறக்கணிப்புக்கும் தான் அஞ்சுகிறார்கள்.
என்றும் அவர்களுக்கு ஆதரவாகவே, நாம் இருக்க வேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன்.
The author, Dr Farook Abdulla has finished his M.D. from Dr. MGR Medical University.
An award winning author, He is well known for his in depth medical articles in Tamil.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam