Endometriosis in Tamil : எண்டோமெட்ரியோசிஸ் Chocolate cyst சாக்லேட் சிஸ்ட் நோயினால் அவதிப்படுபவர்களுக்கு உணவு முறை மாற்றம் மூலம் தீர்வு காண முடியுமா?
எண்டோமெட்ரியோசிஸை உணவு மூலம் கட்டுப்படுத்த முடியுமா?
உங்கள் வாழ்வில் இந்த பதிவு சிறு மாற்றத்தையேனும் நிகழ்த்த இறைவனிடம் பிரார்த்தித்து தொடர்கிறேன்
மனித இனத்தின் இனப்பெருக்க வருடங்களான 15 முதல் 45வயதுக்குட்பட்ட பெண்மணிகளுள் நூறில் ஒருவருக்கு இந்த “எண்டோமெட்ரியோசிஸ்” (Endometriosis) எனும் நோய் வருகிறது.
எண்டோமெட்ரியம் (endometrium) என்பது கர்ப்பபையின் உட்புற சுவராகும்.
பூப்பெய்திய கனத்தில் இருந்து மாதம் ஒரு முறை மாதவிடாய் எனும் பீரியட்ஸ் பெண்களுக்கு நிகழும்.
பீரியட்ஸ், கர்ப்பபையில் இருந்து கீழ் நோக்கி கர்ப்ப வாய்( cervix) வழியாக ஜனனக்குழாய் (vagina) வழியாக வெளியேறும்.
ஆனால் சில நேரங்களில்
மிக அதிகமாக கழிவு வெளியேறும் போது மாதவிடாய் கழிவானது, உள்நோக்கி சென்று சினைக்குழாய் வழியாக சினைப்பையை அடைந்து விடும். சில நேரங்களில் சிறு மற்றும் பெருங்குடல் , மலக்குடல், சிறுநீர்ப்பை. இவையன்றி
நுரையீரல், மூளை போன்றவற்றிலும் சென்று அங்குள்ள திசுக்களுக்கு மேல் படிந்து விடும் நிலை ஏற்படுகிறது.
அதாவது கர்ப்பபையின் உள் சுவர் அது இருக்க வேண்டிய கர்ப்பபையை விட்டு வெளியே சில இடங்களில் இருப்பதைத் தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று கூறுகிறோம்.
Endometriosis in Tamil மிகப்பெரும்பான்மையாக சினைப்பை எனும் ஓவரியில் இந்த கட்டிகள் ஏற்படுகின்றன.
பார்க்க ப்ரவுன் நிறத்தில் சாக்லேட் போன்று இருப்பதால் சினைப்பையில் வரும் எண்டோமெட்ரியோசிஸ் நோயை “சாக்லேட் சிஸ்ட்”(chocolate cyst) என்று அழைக்கிறோம்.
மிகக் கடுமையான மாதவிடாய் காலத்து அடிவயிற்று வலி
மாதவிடாய் கால வலி என்பது பொதுவானது. ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வலி அசாதாரணமானது. தாங்க இயலாத வலியாக அது இருக்கும்.
முதுகுப்பகுதிக்கு வலி பரவும்.
வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகளை உண்டாக்கும்.
அடிக்கடி மலம் கழிக்கச்செய்யும்.
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதலை ஏற்படுத்தும்.
உடலுறவின் போது கடும் வலி ஏற்படும். இதனால் உடலுறவில் நாட்டம் இருக்காது.
மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறி அதனால் ரத்த சோகை நோய் (Anemia) உண்டாகும். இதனால் உடல் சோர்வு இருக்கும்.
சினைப்பையில் சாக்லேட் சிஸ்ட் இருந்தால் கர்ப்பமடைவதில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் சரியான நேரத்தில் கர்ப்பம் அடைய முடியாமல் தள்ளிப்போகும். இது சமூகம் சார்ந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கும்.
இதனால் அதிக மன அழுத்தம் , கோபம் , விரக்தி ஏற்படும்.
இந்த நோயின் மருத்துவ அறிவியல் காரணங்கள்(Pathophysiology) என்ன?
1.இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்தத்தில் அதிகமான அளவு ஈஸ்ட்ரோஜென் : குறைவான அளவு ப்ரோஜெஸ்ட்ரான் இருக்கிறது.
சாதாரண நிலையில் பெண்களுக்கு , இந்த ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் சம பங்கீட்டில் வேலை செய்ய வேண்டும்.
ஈஸ்ட்ரோஜென் அதிகமானால் பல பிரச்சனைகள் வரும். பிசிஓடி நோயும் ஈஸ்ட்ரோஜென் அதிகமாவதால் வருவது தான்.
2.எண்டோமெட்ரியோசிஸ் – ஆட்டோ இம்யூன் வியாதியாகவும் பார்க்கப்படுகிறது.
ஆட்டோ இம்யூனிட்டி என்பது நமது எதிர்ப்பு சக்தியே நம்மை எதிர்ப்பதாகும்.
எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் சுய எதிர்ப்பு காரணிகள் ( auto antibodies ) அதிகம் தென்படுவதை அறிய முடிகிறது.
3.ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்கள் எனும் ஹார்மோன்கள் அதிகமாக உருவாக்கப்படுவது புலனாகிறது . அதன் விளைவாக அதிக அளவில் உள்காயங்கள் (inflammation) ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
4. தீவிர மன அழுத்தமும் ( stress) உள்காயங்களை உருவாக்குவதில் அதீத பங்கு வகிக்கிறது.
1. மாதவிடாயின் போது ஏற்படும் அதீத வலிக்கான வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது
2. ஹார்மோன் மாத்திரைகள்
ரத்தத்தில் ப்ரொஜஸ்ட்ரோன் அளவுகளைக்கூட்டி ஈஸ்ட்ரோஜென் அளவுக்குளைக் குறைக்கும் கருத்தடை மாத்திரைகள்..
ரத்த ஈஸ்ட்ரோஜெனை எதிர்த்து கட்டுப்படுத்தும் மாத்திரைகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன
3.அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை எடுக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது
மேற்சொன்ன மூன்றும் நிரந்தரமான தீர்வை வழங்கும் சிகிச்சைகள் அன்று.
எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஆட்டோ இம்யூன்வியாதியாக இருப்பதால் அந்த நோயை உண்டாக்கும் காரணியை நாம் களையாமல் நோயைக் கட்டுப்படுத்த இயலாது.
இந்த காரணத்தினால் தான் ஒரு முறை சாக்லேட் சிஸ்ட் எடுத்தாலும் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
இருப்பினும் கர்ப்பமாகக் காத்திருக்கும் பெண்களுக்கு Endometriosis in Tamil அறுவை சிகிச்சை உடனடி பலனை தருகிறது. மகப்பேறு மருத்துவர் அறிவுரையின் படி அதை செய்து கொள்வது சிறந்தது.
உணவின் மூலம் நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்த முடியுமா?
முடியும். Endometriosis Diet in Tamil பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
ஆம், Endometriosis இருந்தாலும் சரியான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்புடன் கர்ப்பம் தரித்துக்கொள்ள முடியும்.
மருந்து, உணவு பழக்கவழக்கங்களில் மாற்றம், மற்றும் பயிற்சிகள் தான் இதற்க்கு தீர்வு
96268 93006 என்ற எண்ணுக்கு whatsapp அனுப்பவும்
The author, Dr Farook Abdulla has finished his M.D. from Dr. MGR Medical University.
An award winning author, He is well known for his in depth medical articles in Tamil.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam