நோயை உணவின் மூலம் நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்த முடியுமா?
முடியும்…
ஆட்டோ இம்யூன் வியாதிகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.
ஆனால் நம் உணவு முறை , வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதை மருத்துவ அறிவியலும் ஆதரிக்கிறது.
1. உணவில் கோதுமை மற்றும் மைதாவில் அடங்கி இருக்கும் க்ளூடன்களை ஒரு வருடகாலம் தவிர்த்தால் இந்த நோய் தரும் அதீத வலி குணமாகிறது என்று பின்வரும் ஆய்வு கூறுகிறது.
2. உணவில் ஒமேகா 3 எனும் கொழுப்பு அதிகமாக எடுப்பது எண்டோமெட்ரியோசிஸின் பிரச்சனைகளை குறைக்க உதவும் என்கிறது இந்த ஆய்வு.
3. நாம் உண்ணும் உணவில் நேரடியான இனிப்பு , மறைமுகமான இனிப்பு இவற்றை குறைப்பது எண்டோமெட்ரியோசிஸ் நோயில் சிறந்த மாற்றத்தை தரும்
4. உள்காயங்களை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்ட நட்ஸ் வகைகள் , பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்த தீர்வை தரக்கூடும்
5. இந்த நோயைப் பொறுத்தமட்டில் காபி அருந்துவதை நிறுத்தி விட்டு க்ரீன் டீ அருந்துவது சிறப்பான முடிவாக இருக்கும்.
6. இந்த நோயைப் பொறுத்த வரை சிகப்பு இறைச்சியை குறைப்பது பயன் தரும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
சிகப்பு இறைச்சியில் அதிகமான அளவு அரகிடானிக் அமிலம் (Arachidonic acid ) இருப்பதால் இது அதிக ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்களை உருவாக்குகிறதாம். இதனால் உள்காயங்கள் அதிகமாக வாய்ப்புண்டு என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
ஆனால் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிக மாவுச்சத்து உணவு முறையில் செய்யப்பட்டவை என்பதை வைத்துப்பார்த்தால் ,குறை மாவு உணவு முறையில் இறைச்சி பிரச்சனை தராது என்றே கொள்ளலாம்
எண்டோமெட்ரியோசிஸை நமது ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் கண்ட்ரோல் செய்து வைத்திருக்கும் பெண்கள் உள்ளனரா?
பலர் உள்ளனர்.
பல சமயங்களில் தங்களின் வெற்றிக்கதைகளை குழுவில் பகிர்ந்துள்ளனர்.
எண்டோமெட்ரியோசிஸ்க்கான மாடல் டயட் சார்ட் இதோ. (ஒவ்வொரு ஆளைப்பொறுத்தும் சிறிது மாறுபடலாம்)
காலை எழுந்ததும்
இனிப்பு பால் சேர்க்காத கிரீன் டீ
காலை உணவு
தேங்காய் 100 கிராமுடன்
3 முட்டைகள் உண்ணலாம்
மதியம்
200 கிராம் காய்கறிகள்
+ 100 கிராம் கீரைகள்
மாலை
க்ரீன் டீ ( இனிப்பு பால் சேர்க்காமல்)
இரவு
கோழி ( வாரம் மூன்று நாட்கள்)
ஒமேகா 3 நிரம்பிய சிறிய சைஸ் மீன்கள் ( வாரம் மூன்று நாட்கள்)
மட்டன் ( வாரம் ஒரு நாள்)
ஒமேகா 3 மீன் எண்ணெய் மாத்திரை தினமும் ஒன்று எடுக்கலாம் ( omega 3 fatty acid is an anti inflammatory)
பசுமஞ்சள்(curcumin is an anti inflammatory) தினமும் எடுக்கலாம்.
Night shade காய்கறிகள் என்று அழைக்கப்படும்
குடை மிளகாய், தக்காளி , வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவை ஆட்டோ இம்யூனிட்டியை அதிகரிப்பவை என்று அறியப்பட்டுள்ளன.
ப்ராக்கலி/ காளிபிளவர்/ முட்டைகோஸ் போன்ற ப்ராசிக்கா குடும்ப காய்கறிகள் எண்டோமெட்ரியோசிஸ்க்கு நன்மை பயப்பவை. காரணம் இவை கல்லீரலை நன்றாக தூண்டி அதிகப்படியான ஈஸ்ட்ரோஜெனை வெளியேற்ற உதவுகின்றன.
தாவரங்கள் மூலம் வரும் மறைமுக ஈஸ்ட்ரோஜெனான phyto estrogen அடங்கிய சோயா, ஃப்ளாக்ஸ் விதை போன்றவற்றை இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்கள் தவிர்க்கவும்.
Xeno estrogen என்பவை BPA அடங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள் வழி வரலாம். எனவே BPA free பிளாஸ்டிக் உபயோகியுங்கள். அல்லது மாற்று முறைகளுக்கு மாறிவிடுங்கள் .
மன அமைதியாக வாழத்தேவையான பயிற்சிகள் செய்யுங்கள்.
துணையுடன் மனம் விட்டுப்பேசுங்கள். பாசிடிவாக யோசியுங்கள்.
இறைவன் நாடினால் கட்டாயம் குழந்தை பிறக்கும். எனவே குழந்தைப்பேறை நினைத்து அதிகம் கவலைப்படாதீர்கள். ரிலாக்ஸாக இருப்பது ரொம்ப முக்கியமானது.
தினசரி எட்டு மணிநேர உறக்கம். கட்டாயம் தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி
ஆட்டோ இம்யூன் பேலியோ உணவு முறை இந்த நோய் தரும் பெரும்பான்மை பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வரும்.
நிரந்தர தீர்வு ஏற்படாவிடினும் நிச்சயம் அன்றாட வாழ்வியலில் முன்னேற்றத்தை தரும்.
தினசரி வாழ்க்கை திறன்(Quality of Life) மேம்படும்
எடை குறைப்பு என்பது பல நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைத்தருவதாகும்.
எடை குறையும் போது தானாக சுய மதிப்பீடும் அதிகமாகிறது. தன்னம்பிக்கையும் அதிகமாகிறது. மன அழுத்தம் விலகுகிறது.
எனவே பேலியோ உணவு முறை எடை குறைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.
குறைந்தபட்சம் ஒருவருட காலம் தொடர்ந்து சீட்டிங் இல்லாமல் இந்த உணவு முறையை கடைபிடித்து பார்த்த பின்னரே உண்மையான பலனை தந்ததா இல்லையா என்று கூற முடியும்.
பலன் தருமேயானால், அதையே வாழ்வியலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
தியாகங்கள் செய்தே வரலாறு படைக்க முடியும்
உணவில் சில தியாகங்கள் செய்து எண்டோமெட்ரியோசிஸை அடக்கி ஆள முடியும்
நம்பிக்கையே வாழ்க்கை!!!
ஆம், PCOD இருந்தாலும் சரியான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்புடன் கர்ப்பம் தரித்துக்கொள்ள முடியும்.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam