Open 10 am to 4 pm
Open 10 Am to 4 Pm

Can I eat Non Veg during Pregnancy?

Can I eat Non Veg during Pregnancy

 கர்ப்பகாலத்தில் குழந்தையின் வளர்ச்சி, தாயின் இரத்த அளவு, மூளை வளர்ச்சி,
தசை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு நல்ல தரமான சத்துக்கள் அவசியம்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்று தெரியவரும் அந்த நிமிடம், அளவற்ற மகிழ்ச்சியோடும் பலவிதமான கேள்விகளோடும் தான் தொடங்குகிறது. Gheeth IVF Hospital-க்கு வரும் பல கர்ப்பிணிப் பெண்கள் என்னிடம் கேட்கும் கேள்வி: “டாக்டர், நான் Non Veg  சாப்பிடலாமா” என்பதுதான்.

Experience. Care. Innovation.

0

Years of Experience

0 +

Happy Mothers

0 %

Proven Success Rate

0 +

Awards Won

எழுதியவர்: டாக்டர் வினோதினி பிரதீப், IVF நிபுணர்

கர்ப்ப காலத்தில் அசைவ உணவு சாப்பிடலாமா?

கர்ப்ப காலத்தில் உணவு குறித்து பல சந்தேகங்களும், குடும்ப நம்பிக்கைகளும் இருக்கும். குறிப்பாக மாட்டிறைச்சி குறித்து சில இடங்களில் தயக்கம் இருந்தாலும், கன்னியாகுமரி பகுதியில் அது பல குடும்பங்களில் வழக்கமான உணவாக உள்ளது. உண்மையில் முக்கியமானது — உணவு சுத்தமாகவும், நன்றாக சமைக்கப்பட்டதாகவும், அளவோடு இருப்பதுதான்.

அசைவ உணவு கர்ப்பிணிகளுக்கு ஏன் பயனுள்ளதாக இருக்கலாம்?

  • உயர்தர புரதம்: குழந்தையின் தசைகள், உடல் உறுப்புகள் மற்றும் பிளாசென்டா வளர்ச்சிக்கு உதவும்.
  • இரும்புச்சத்து: கர்ப்பகால ரத்தசோகை அபாயத்தை குறைக்க உதவும். இறைச்சியில் உள்ள heme iron உடலால் எளிதாக உறிஞ்சப்படும்.
  • Vitamin B12: குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு முக்கியமான சத்து.
  • Zinc மற்றும் Choline: செல்கள் வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன.

மாட்டிறைச்சி கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா?

மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கர்ப்ப காலத்தில் முழுமையாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அது நல்ல புரதம், இரும்புச்சத்து, Vitamin B12 மற்றும் Zinc போன்ற முக்கிய சத்துக்களை வழங்க முடியும்.

ஆனால் கவனிக்க வேண்டியவை:

  • நன்றாக வேகவைத்த மாட்டிறைச்சி மட்டும் சாப்பிட வேண்டும்.
  • அரைகுறையாக சமைத்த meat அல்லது பழைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.
  • அதிக எண்ணெய் மற்றும் deep-fried வகைகளை அடிக்கடி சாப்பிட வேண்டாம்.
  • வீட்டில் சுத்தமாக சமைத்த உணவு சிறந்தது.
  • அளவோடு சாப்பிடுவது முக்கியம்.

எளிமையாகச் சொன்னால்: பாதுகாப்பாக சமைத்து, அளவோடு எடுத்தால், மாட்டிறைச்சியும் ஒரு புரதம் மற்றும் இரும்புச்சத்து உணவாக இருக்கலாம்.

கர்ப்ப காலத்தில் நல்ல அசைவ தேர்வுகள்

  • நன்றாக சமைத்த முட்டை
  • நன்றாக வேகவைத்த மீன்
  • கோழி இறைச்சி
  • மட்டன் அல்லது மாட்டிறைச்சி — சுத்தமாகவும் நன்றாக சமைத்ததாகவும் இருந்தால்

Raw meat, undercooked meat மற்றும் பழைய உணவுகள் infection அபாயத்தை அதிகரிக்கலாம்.

சைவம் சாப்பிடுபவர்களுக்கு மாற்று வழி

நீங்கள் சைவம் என்றால் கவலைப்பட வேண்டாம். சரியான திட்டமிடலுடன் ஆரோக்கியமான கர்ப்பம் சாத்தியம்.

  • Protein: பருப்பு, கடலை, பயறு, சோயா, பன்னீர், பால், தயிர்.
  • Iron: கீரை, பேரீச்சம்பழம், மாதுளை, பயறு வகைகள்.
  • Vitamin B12: சிலருக்கு supplement தேவைப்படலாம்.
  • DHA/Omega-3: மருத்துவர் ஆலோசனையுடன் vegetarian DHA supplement எடுத்துக்கொள்ளலாம்.
மருத்துவரின் குறிப்பு:

கர்ப்ப கால உணவு என்பது பயமுறுத்தும் விஷயம் அல்ல. உங்கள் உடல்நிலை, Hb level, diabetes, BP, vomiting, weight gain ஆகியவற்றைப் பொறுத்து உணவு ஆலோசனை மாறும். தனிப்பட்ட சந்தேகங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

Read more by Dr. Vinodhini Pradeep

Dr Vinodhini Pradeep Gheeth IVF

கர்ப்பிணிகள் முற்றிலும் தவிர்க்க வேண்டிய 6 முக்கிய உணவுகள்: Top 6 Foods to Avoid in Pregnancy

உங்களுக்கு இனிய, ஆரோக்கியமான பிரசவ பயணத்திற்கு வாழ்த்துகள்! உங்களின் கர்ப்ப காலம், மகப்பேறு பராமரிப்பு (Antenatal Care) அல்லது மலட்டுத்தன்மை சார்ந்த அதிநவீன சிகிச்சைகளுக்கு (Advanced IVF Treatments), கீத் ஐவிஎஃப் மருத்துவமனையை இன்றே தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

கர்ப்பகால சந்தேகங்கள் அல்லது கருவுறுதல் குறித்த ஆலோசனைகள் தேவையா? வாட்ஸ்அப் பட்டனை கிளிக் செய்யவும்.