Menstrual Cup in Tamil : மென்ஸ்ட்ருவல் கப்
190 கோடி பெண்கள், மாதம் ஒருமுறை 3 முதல் 7 நாட்கள், தங்களது வாழ்நாளில் 6.25 வருடங்கள்
அல்லது 2280 நாட்கள் மாதவிடாய் நாட்களாக கழிக்கின்றனர்
ஒரு பெண் தன் வாழ்நாளில், 10,000 சேனிட்டரி நேப்கின்களை உபயோகிக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், சேனிட்டரி நேப்கின்களுக்கு மாற்றாக எளிதாக உபயோகிக்கும் வண்ணம் அதே சமயம் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டதே
“மாதவிடாய் கிண்ணம்” (MENSTRUAL CUP)
77.3% மகளிர் சேனிட்டரி நேப்கின்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
அவற்றை முழுமையான திருப்தியுடன் பயன்படுத்துவதில்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. சேனிட்டரி நாப்கின் பயன்பாட்டாளர்களிடையே உள்ள பொதுவான சிரமங்கள்
– நாப்கின்களால் ஏற்படும் சரும அலர்ஜி
– அரிப்பு / நமிச்சல் / எரிச்சல்
– கீழ் உள்ளாடைகளில் அதிகமான பளுவை சுமக்கும் உணர்வு, அசவுகரியமாக இருத்தல்.
– பிசுபிசுப்பான சங்கடமான உணர்வு
– கீழ் உள்ளாடைகளில் நாப்கின்களை கச்சிதமாகப் பொருத்த வேண்டிய தேவை. அவ்வாறு பொருத்தாவிடில் ரத்தம் லீக் ஆகி உடைகளில் படிதல்
– சரியான நேரத்தில் நாப்கின்களை மாற்ற வேண்டிய தேவை
-ரத்தம் வெளியே கசிதல்
கெட்ட வாசனை அடித்தல்
ஆகிய பல பிரச்சனைகளைக் கொண்டுள்ளது.
மேலும் பிரதிமாதம் சில நூறு ரூபாய்கள் நேப்கின்களுக்கென செலவு ஆகிறது.
பல விளம்பரங்களில் சேனிட்டரி நாப்கின்களை அணிந்து கொண்டு மகளிர் விளையாடுவது போடுவதும் ஓடுவது ஆடுவது என்று இருப்பது போலவும் காட்டப்படுகின்றது. ஆனால் நிஜத்தில் சானிட்டரி நாப்கின்கள் அத்தனை சவுகரியமாக இருப்பதில்லை.
மேற்கூறிய பிரச்சனைகள் இருந்து அதில் இருந்து மாற்று தேடும் சகோதரிகள்
மென்ஸ்ட்ருவல் கப்கள் பயன்படுத்தலாம்.
பிறப்புறுப்புக்கு உள்ளே வைக்கும் உபகரணமாக இருப்பதால் இது ஒருவித அறுவெறுப்புடன் நோக்கப்படுகிறது.
– இந்த கப் தேர்ந்தெடுத்தலைப் பொருத்தவரை அவரவருக்கு உகந்த சைஸ் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
– சரியாக பொருந்தாமல் உள்ளே வைத்தால் குத்துவது போன்ற வலி எடுக்கும் வாய்ப்பு உள்ளது.
– ஆரம்ப நாட்களில் , உள்ளே வைத்து விட்டு வெளியே எடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டு அதனால் பயம் பதட்டம் ஏற்படலாம். எனினும் சில நாட்களில் அதை எளிதில் செய்ய முடியும்.
கப்களை நீரில் கொதிக்க வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். எனவே நீர் மற்றும் அதை கொதிக்க வைக்கத் தேவையான வெப்பம் வேண்டும்.
நாப்கின்களைப் போல எளிதில் பார்மசிகளில் கிடைக்குமாறு இந்த கப்கள் இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பெரும்பாலும் வாங்க முடிகிறது.
மென்ஸ்ட்ருவல் கப் சந்தையில் 200 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை விற்கிறது.
நல்ல தரமான கப் ரூபாய் 1000 என்ற விலையில் கிடைக்கிறது.
ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கும் போது மாதாந்திர செலவினம் குறைகிறது என்றாலும்
பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களால் ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து கப் வாங்க இயலாது என்பதே உண்மை.
பொது இடங்களுக்கு வெளி இடங்களுக்கு செல்லும் போது மகளிர் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.
மாணவிகள் என்றால் பள்ளி கழிப்பறைகள். பெண்கள் என்றால் அலுவலக கழிப்பறைகள்
நேப்கின்களை இவ்விடங்களில் மாற்றுவது என்பது எளிதானது. ஆனால் கப்களைப் பொருத்தவரை, அவற்றில் இருக்கும் கழிவு ரத்தத்தை கழிப்பறையில் ஊற்ற வேண்டும். அது கூட பிரச்சனையில்லை. ஆனால் கப்களை கழுவுவதற்கு சுத்தமான நீர் சிறுதளவாவது வேண்டும். இது நமது நாட்டில் பெரிய சவால் தான்.
பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கைகளில் சுத்தமான நீர் கொண்டு செல்ல முடியும். ஆனால் நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு இது சவாலாக இருக்கும்.
இவையெல்லாம் சவால்களாயினும், மென்ஸ்ட்ருவல் கப் – உபயோகிப்பாளர்களிடையே திருப்திகரமானதாக இருப்பதாகவும். உபயோகிக்க எளிமையானதாகவும் இருப்பதாகவே முடிவுகள் கிடைக்கின்றன.
கப் உபயோகிப்பதால் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று நிகழ்வுகள் என்பது அதை சரியாக பராமரிக்காததால் ஏற்படும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன. மற்றபடி, சானிட்டரி நாப்கின்கள் / துணி / டாம்பான்கள் ஆகியவற்றை ஒப்பிடும் போது மென்ஸ்ட்ருவல் கப்கள் சுகாதாரமானவையாகவும் பக்கவிளைவுகள் குறைவானதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மகளிரைப் பொருத்தவரை, அவர்களின் மாதவிடாய் காலங்களில், முறையான சுகாதாரத்தைப் பேணுதல் என்பது அவசியமாகும். அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் படியும் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாடு என்பது பிரச்சனையற்றதாகவும், உபயோகிப்பாளர்களிடையேவும் திருப்தி தரக்கூடியதாகவும் இருப்பதால், அதை விரும்பினால் மாற்றாக உபயோகிக்கலாம்
Best IVF centre in Marthandam
WhatsApp us