AZOOSPERMIA TAMIL
குழந்தையின்மைல ஆண்களோட பங்கு என்ன? பெண்கள் மட்டும் தான் INFERTILITY பிரச்னைக்கு காரணம்னு தப்பா புரிஞ்சுட்டு இருக்கோம். குழந்திமைக்கு, 30% காரணம், ஆண்களால் தான்னு ஆராய்ச்சிகள் சொல்லுது.
MALE INFERTILITY பல் காரணங்களால் ஏற்படலாம். குறைந்த விந்தணு எண்ணிக்கை, poor motility, abnormal sperms, ஹார்மோன் problems, varicocele ஆகியவை இதில் அடங்கும். விந்தணுக்கள் முழுமையாக இல்லாதது azoospermiaனு சொல்வோம்.
மாறிவரும் வாழ்க்கை முறை, மன அழுத்தம், smoke பண்றது, அதிகப்படியான alcohol, தவறான உணவுப் பழக்கம் அதிக வெப்பம் உடைய பகுதிகளில் பணியாற்றுவது ஆகியவை பொதுவான காரணங்கள்.
விதை அல்லது புரோஸ்ரேட் தொற்று, முதுகுதண்டவடம், இடுப்பு, ஆண் உறுப்பு மற்றும் அடிவயிற்றில் ஏதேனும் பிரச்சனை இருந்தா கூட விந்தணுக்கள் குறைபாடு உருவாக வாய்ப்புகள் உள்ளன.
ஒராண்டுக்கும் மேலாக முயற்சி செய்தும் குழந்தை கிடைக்கவில்லை என்றால், ஆண்கள் தங்களின் விந்தணுக்களை sperm test மூலம் பரிசோதிக்க வேண்டும். ஆண் மலட்டுத்தன்மையை கண்டுபிடிக்க இதுகூட hormone tests, genetic tests, மற்றும் scan செய்யனும்.
விந்தணுக்கள் இல்லாத நிலையான அசோஸ்பெர்மியாவில் , Obstructive மற்றும் non obstructive அசோஸ்பெர்மியா ரெண்டு வகை இருக்கு.
Obstructive அசோஸ்பெர்மியாவில் விதைப்பையில் விந்தணுக்கள் எல்லாம் உருவாகும், ஆனால் அதை வெளியேற்றுவதில் தடை இருக்கும். இதில் விந்தணுக்கள் வெளியேறுவதில் PROBLEM இருக்கும். இதுக்கு reasons Blocks in the vas tubeல இருக்கலாம் இல்லைனா ejaculatory duct அல்லது epidydimis இல்ல விதைப்பையில் கூட தடை இருக்கலாம்.
பொதுவான கரங்களில், அம்மைக்கட்டுனு சொல்ற MUMPS சின்ன வயசில் வந்தாலோ,
விதைப்பைல அடி பட்டிருந்தாலோ, மரபியல் Genetic problems இருந்தா கூட வரலாம்
இதுக்கு தீர்வு அறுவை சிகிச்சை மூலம் பாதிக்கப்பட்ட வால்வுகளை சரி செய்தாலே பொதும்
சிலருக்கு நவீன tesa pesa போன்ற procedures மூலமும் குழந்தை கிடைக்க வாய்ப்பு இருக்கு. PESA (Aspirating sperm from the epidydimis). TESE (Extracting sperm directly from the testis) மூலமா எடுத்த விந்தணுக்களை IVF ICSI மூலமா மனைவிக்கு வெச்சு CONCEIVE பண்ண வைக்கலாம்
Non obstructive Azoospermia வில் விந்தணுக்கள் உற்பத்தியிலே குறைபாடு இருக்கும்..
இதுல விதைப்பையில் பிரச்னை இருக்கும்.
இதுக்கு காரணம் பெரும்பாலும் மரபியல் (Genetic) காரணங்கள் தான்.
சிலருக்கு காயத்தினாலும், விதை கீழ இறங்காமல் இருப்பதாலும் (Undescended testes)
தேவை இல்லாத ஆன்டிபயாடிக்ஸ் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாலும் வரலாம்
Non obstructive Azoospermiaக்கு (TESE),மூலமா விந்தணுக்களை பிரித்து எடுத்து IVF முறையில் குழந்தையை உருவாக்குவதற்கான வழி உண்டு. Hormone injections மூலமா hormone problem இருக்கவங்களை குணப்படுத்தலாம்
இத்தகைய பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமாகும். அதிக நேரம் ஓய்வெடுக்க வேண்டும். மன அழுத்தம் இல்லாமல், மன அமைதியுடன் இருக்க வேண்டும். தவறான வாழ்க்கை பழக்கங்களை நிறுத்தனும். உங்க விந்தணுக்களின் எண்ணிக்கையை பெருக்க இந்த விஷயங்களை முயற்சி செய்யுங்க
Male infertility பத்தி ஒளிவுமறைவில்லாமல் விவாதிப்பதின் மூலம், இந்தப் பிரச்சினையைச் சுற்றியுள்ள STIGMA நாம் உடைக்க முடியும். INFERTILITY TREATMENT தயங்காம எடுக்கிற சூழலை நாம உருவாக்கணும்.
என்னை instagramல் follow பண்ணுங்க. உங்க நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றால் share பண்ணுங்க.
The author, Dr. Dr Vinodhini Pradeep. is a Fertility Consultant at Care IVF. For an appointment with the doctor, call +91 96268 93006. Book a Consultation at Gheeth IVF.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam