Diabetes in Pregnancy (Gestational Diabetes) என்பது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் டயாபடிஸ் வருவது ஆகும்.
ஒரு பெண் தனது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் இயற்கையான உடல் இயங்குவியல் (Normal Physiological Change) சார்ந்த மாற்றம் இது
பெண்ணின் உடலில் உள்ள கணையம் சுரக்கும் இன்சுலின் எனும் ஹார்மோன் சாதாரண நிலையில் அவர்கள் உட்கொள்ளும் உணவில் உள்ள க்ளூகோஸை சிறப்பாகக் கிரகிக்கும்.
ஆனால் கர்ப்ப காலத்தில் சில பெண்களுக்கு வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்காக நஞ்சுக்கொடி(Placenta) சுரக்கும் சில ஹார்மோன்களின் இன்சுலினுக்கு எதிரான வினையால் – இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போவதால் “தற்காலிகமாக நீரிழிவு” போன்ற நிலை கர்ப்பிணிகளுக்கு ஏற்படுகிறது.
இதை கர்பிணிகளுக்கு வரும் நீரிழிவு நோய் என்கிறோம். GDM என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. Gestational Diabetes Mellitus. நூறு தாய்மார்களில் ஏழு முதல் பத்து பேருக்கு இந்த நோய் நிலை வருகிறது.
உடல் பருமன் உள்ள பெண்கள், ஏற்கனவே PCOD இருந்து கருவுற்ற பெண்கள் , 30 வயதுக்கு மேல் கர்ப்பம் அடைபவர்கள் என பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுகிறது. சிலருக்கு இரண்டாம் வகை நீரிழிவு – கர்ப்ப காலத்தில் புதிதாக கண்டறியப்படும். (Newly diagnosed Type II Diabetes in pregnancy)
தாயின் உடலில் உள்ள இன்சுலின் சரியாக வேலை செய்யாமல் போவதால், இன்சுலின் கட்டுக்குள் வைக்க வேண்டிய ரத்த க்ளூகோஸ் அளவுகள் தாயின் ரத்தத்தில் அதிகமாகும் (Hyperglycemia in mother)
இந்த அதிகப்படியான க்ளூகோஸ் நஞ்சுக்கொடி( Placenta) வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்லும். இந்த க்ளூகோசை கட்டுக்குள் கொண்டு வர குழந்தையின் கணையம் (Baby’s pancreas) அதிக அளவில் இன்சுலினை சுரக்கும்.
குழந்தையின் ரத்தத்தில் அதிக க்ளூகோஸ் இருப்பதால் ,
சுரக்கப்பட்ட இன்சுலின் , அந்த க்ளூகோசை கொழுப்பாக மாற்றி குழந்தையின் உடலில் சேமித்து விடும். இப்படி குழந்தையின் உடலில் கொழுப்பு தொடர்ந்து சேர்ந்து குழந்தை நன்றாக உடல் பெருத்து விடும்.
இதை “Fetal Macrosomia” என்கிறோம். குழந்தையின் வளர்ச்சி தேவைக்கு மீறி அதிகமாக இருக்கும். ஐந்து கிலோ வரை கூட பிறப்பு எடை செல்லும். இதனால் குழந்தை இயற்கையான முறையில் பிறக்க வாய்ப்பு குறைந்து விடுகிறது.
சிசேரியன் செய்து குழந்தையை பெற்றெடுக்க வேண்டிய சூழல் அதிகமாகிறது. இது போக, குழந்தைக்கு காமாலை , மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்கு குழந்தை செல்லவும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
தாய்க்கு நீரிழிவு இருந்தால் குழந்தை பிறக்கும் சூழலில் அது பிறந்தவுடன் அதன் ரத்த சர்க்கரை அளவுகள் மிகவும் குறைந்து (Neonatal hypoglycemia) அதனால் மரணம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த நீரிழிவு பொதுவாக கர்ப்பகாலத்தின் ஆறு மாதத்திலிருந்து இறுதி மாதம் வரையே அதிகமாக வருகிறது. இதை அறிவது மிக எளிது. மருத்துவரிடம் சரியான பராமரிப்பில் இருக்கும் கர்ப்பிணித்தாய்க்கு அந்தத் தாய் கர்ப்பிணியாக பதிவு செய்யும் முதல் முதல் முறையே நீரிழிவு இருக்கிறதா? என்று ரத்தப்பரிசோதனை செய்யப்படுகிறது.
75 கிராம் க்ளூகோஸை 300 மில்லி லிட்டர் நீரில் கலந்து ஐந்து நிமிடங்களுக்குள் பருகப்பட வேண்டும்.
( இந்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும் செய்ய முடியும். உணவு சாப்பிட்ட பிறகும் செய்ய முடியும்)
இந்த க்ளூகோஸ் திரவத்தை பருகிய பிறகு சரியாக இரண்டு மணிநேரத்திற்கு 140 mg/dl க்குள் இருப்பின் இந்த நீரிழிவு இல்லை என்று அர்த்தம்
140 mg/dl க்கு மேல் இருப்பின் கர்ப்ப கால நீரிழிவு உள்ளது என்று அர்த்தம்
நீரிழிவு இருப்பது கண்டறியப்பட்டால் உடனே அதற்குரிய பிரத்யேக மாவுச்சத்து குறைக்கப்பட்ட உணவு ( MEDICAL NUTRITION THERAPY) முறையை மருத்துவர் பரிந்துரைப்பார்
இந்த உணவு முறையை கடைபிடித்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு
மீண்டும் உணவு சாப்பிட்ட இரண்டு மணிநேரங்களுக்குப் பிறகு ரத்த சர்க்கரை அளவுகள் பரிசோதிக்கப்படும்
இந்த 2 Hours PPBS < 120 mg/dl க்குள் இருப்பின் உணவு முறை மாற்றத்தை தொடர்ர்தால் போதுமானது
இந்த அளவு > 120 mg/dl க்கு மேல் இருப்பின் இன்சுலின் சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் இன்சுலின் ஊசி தாய்க்கும் சிசுவுக்கும் பாதுகாப்பானது.
அதன் மூலம் ரத்த சர்க்கரை அளவுகளை சரிவர கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
கர்ப்ப காலத்தில் நீரிழிவு ஏற்படும் சிலருக்கு பிரசவித்த பிறகும் நீரிழிவு தொடரலாம். எனவே பிரசவித்த பிறகு
6-12 வாரங்களில் மீண்டும்
75 கிராம் க்ளூகோஸ் திரவம் அருந்தி செய்யும் OGTT செய்ய வேண்டும்
அது நார்மலாக இருப்பின்
பிரசவித்த ஆறு மாதங்களிலும்
அதற்கடுத்த வருடம் ஒருமுறையும் இந்தப் பரிசோதனையை தொடர வேண்டும்.
பொதுவாக கர்ப்பிணிகள் அனைவரும் பத்து முதல் பனிரெண்டு கிலோ எடை – கர்ப்ப காலத்தில் கூட வேண்டும் என்பது ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது
எனினும் தற்காலத்தில் அதிக மாவுச்சத்து / ஸ்நாக்ஸ் வகைகள் கூடவே உடல் உழைப்பின்மை போன்றவை சேர்ந்து கொள்வதால் கர்ப்ப கால எடை இருபது கிலோ வரை ஏறும் பெண்களையும் காண முடிகின்றது
கர்ப்பத்திற்கு முன் நார்மல் எடை – பி.எம்.ஐ 18.5-24.9 இருப்பவர்கள்
கர்ப்ப காலத்தில் மொத்தம்
11.5 முதல் 16 கிலோ ஏற வேண்டும்
கர்ப்பத்திற்கு முன் குறைவான எடை இருப்பவர்கள் பி.எம்.ஐ < 18.5 இருப்பவர்கள் கர்ப்ப காலத்தில் மொத்தம் 12.5 முதல் 18 கிலோ கூட வேண்டும்
ஏற்கனவே உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் (Over Weight) 25 – 29.9 இருப்பவர்கள் – கர்ப்ப காலத்தில் 7 முதல் 11.5 கிலோ கூடினால் போதுமானது.
ஏற்கனவே உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் ( OBESE) > 30 இருப்பவர்கள் 5 முதல் 9 கிலோ கூடினால் போதுமானது
முதல் முறை –
கர்ப்பம் கண்டறியப்பட்டவுடன் அல்லது 12 முதல் 16 வாரங்களுக்குள்
இரண்டாம் முறை –
கர்ப்பம் 24 முதல் 28 வாரங்களுக்குள்
செய்யப்பட வேண்டும்
மூன்றாம் முறை –
கர்ப்பம் 32 முதல் 34 வாரங்களுக்குள் செய்யப்பட வேண்டும்
முறையாக மகப்பேறு மருத்துவரிடம் சரியான கால அளவில் பரிசோதனைகள் செய்ய வேண்டும்.
அவரது அறிவுரைகளை செவ்வனே கடைபிடிக்க வேண்டும்.
கர்ப்ப கால நீரிழிவை காலத்தே அறிந்தால் சிறப்பான சிகிச்சை செய்து கட்டுக்குள் வைக்க இயலும்.
நீரிழிவு கண்டறிதல் மற்றும் சிகிச்சை அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைக்கும்
கர்ப்ப காலத்தில் நீரிழிவு பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 96268 93006 என்ற எண்ணிற்கு WHATSAPP செய்யவும்
நன்றி
The author, Dr. Dr Vinodhini Pradeep. is a Fertility Consultant at Care IVF. For an appointment with the doctor, call +91 96268 93006. Book a Consultation at Gheeth IVF.
Gheeth IVF provides
Fertility Treatment in Marthandam, Nagercoil
Karakonam & Trivandrum
Best IVF centre in Marthandam