fbpx
Gheeth IVF logo
9626893006
Open 10 am to 4 pm

எண்டோமெட்ரியோசிஸ் Chocolate cyst சாக்லேட் சிஸ்ட் நோயினால் அவதிப்படுபவர்களுக்கு உணவு முறை மாற்றம் மூலம் தீர்வு காண முடியுமா?

எண்டோமெட்ரியோசிஸை உணவு மூலம் கட்டுப்படுத்த முடியுமா?

உங்கள் வாழ்வில் இந்த பதிவு சிறு மாற்றத்தையேனும் நிகழ்த்த இறைவனிடம் பிரார்த்தித்து தொடர்கிறேன்

மனித இனத்தின் இனப்பெருக்க வருடங்களான 15 முதல் 45வயதுக்குட்பட்ட பெண்மணிகளுள் நூறில் ஒருவருக்கு இந்த “எண்டோமெட்ரியோசிஸ்” (Endometriosis) எனும் நோய் வருகிறது.

எண்டோமெட்ரியம் (endometrium) என்பது கர்ப்பபையின் உட்புற சுவராகும்.

பூப்பெய்திய கனத்தில் இருந்து மாதம் ஒரு முறை மாதவிடாய் எனும் பீரியட்ஸ் பெண்களுக்கு நிகழும்.

பீரியட்சின் போது நிகழ்வது என்ன?

மாதம் ஒரு முறை இரண்டு சினைப்பைகளில்( ovary) ஏதோவொன்றில் இருந்து ஒரு கரு முட்டை(ova) வெளியேறும்

அந்த முட்டை சினைக்குழாய் (fallopian tube) வழியாக வந்து கர்ப்பபையில் காத்திருக்கும்.

தன்னுடன் இணை சேர ஆண் ஜோடியின் விந்தணு வருகிறதா? என்ற காத்திருப்பு ஓரிரு தினங்கள் இருக்கும்.

விந்தணு வந்து கூடாது நிலையில் , இந்த கருமுட்டையுடன் சேர்ந்து கர்ப்ப பையின் உள்புற சுவரும் சேர்ந்து மாதவிடாய் கழிவாக வெளியேற்றப்படும்.

இதை தான் “பீரியட்ஸ்” என்று அழைக்கிறோம்.

பொதுவாக இந்த பீரியட்ஸ் எனும் கழிவானது கர்ப்பபையில் இருந்து கீழ் நோக்கி கர்ப்ப வாய்( cervix) வழியாக ஜனனக்குழாய் (vagina) வழியாக வெளியேறும்.

ஆனால் சில நேரங்களில்

மிக அதிகமாக கழிவு வெளியேறும் போது மாதவிடாய் கழிவானது, உள்நோக்கி சென்று சினைக்குழாய் வழியாக சினைப்பையை அடைந்து விடும். சில நேரங்களில் சிறு மற்றும் பெருங்குடல் , மலக்குடல், சிறுநீர்ப்பை..இவையன்றி

நுரையீரல், மூளை போன்றவற்றிலும் சென்று அங்குள்ள திசுக்களுக்கு மேல் படிந்து விடும் நிலை ஏற்படுகிறது.

அதாவது கர்ப்பபையின் உள் சுவர் அது இருக்க வேண்டிய கர்ப்பபையை விட்டு வெளியே சில இடங்களில் இருப்பதைத் தான் எண்டோமெட்ரியோசிஸ் என்று கூறுகிறோம்.

மிகப்பெரும்பான்மையாக சினைப்பை எனும் ஓவரியில் இந்த கட்டிகள் ஏற்படுகின்றன.

பார்க்க ப்ரவுன் நிறத்தில் சாக்லேட் போன்று இருப்பதால் சினைப்பையில் வரும் எண்டோமெட்ரியோசிஸ் நோயை “சாக்லேட் சிஸ்ட்”(chocolate cyst) என்று அழைக்கிறோம்.

சரி இந்த நோயின் அறிகுறிகள் தான் என்ன?

மிகக் கடுமையான மாதவிடாய் காலத்து அடிவயிற்று வலி

மாதவிடாய் கால வலி என்பது பொதுவானது. ஆனால் எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் வலி அசாதாரணமானது. தாங்க இயலாத வலியாக அது இருக்கும்.

முதுகுப்பகுதிக்கு வலி பரவும்.

வயிறு மற்றும் குடல் சார்ந்த உபாதைகளை உண்டாக்கும்.

அடிக்கடி மலம் கழிக்கச்செய்யும்.

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உந்துதலை ஏற்படுத்தும்.

உடலுறவின் போது கடும் வலி ஏற்படும். இதனால் உடலுறவில் நாட்டம் இருக்காது.

மாதவிடாயின் போது அதிக ரத்தம் வெளியேறி அதனால் ரத்த சோகை நோய் (Anemia) உண்டாகும். இதனால் உடல் சோர்வு இருக்கும்.

சினைப்பையில் சாக்லேட் சிஸ்ட் இருந்தால் கர்ப்பமடைவதில் பாதிப்பு ஏற்படுத்தும். இதனால் சரியான நேரத்தில் கர்ப்பம் அடைய முடியாமல் தள்ளிப்போகும். இது சமூகம் சார்ந்த அழுத்தத்துக்கு உள்ளாக்கும்.

இதனால் அதிக மன அழுத்தம் , கோபம் , விரக்தி ஏற்படும்.

இந்த நோயின் மருத்துவ அறிவியல் காரணங்கள்(Pathophysiology) என்ன?

1.இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்களின் ரத்தத்தில் அதிகமான அளவு ஈஸ்ட்ரோஜென் : குறைவான அளவு ப்ரோஜெஸ்ட்ரான் இருக்கிறது.

சாதாரண நிலையில் பெண்களுக்கு , இந்த ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் சம பங்கீட்டில் வேலை செய்ய வேண்டும்.

ஈஸ்ட்ரோஜென் அதிகமானால் பல பிரச்சனைகள் வரும். பிசிஓடி நோயும் ஈஸ்ட்ரோஜென் அதிகமாவதால் வருவது தான்.

2.எண்டோமெட்ரியோசிஸ் – ஆட்டோ இம்யூன் வியாதியாகவும் பார்க்கப்படுகிறது.

ஆட்டோ இம்யூனிட்டி என்பது நமது எதிர்ப்பு சக்தியே நம்மை எதிர்ப்பதாகும்.

எண்டோமெட்ரியோசிஸ் பாதிக்கப்பட்ட பெண்களில் சுய எதிர்ப்பு காரணிகள் ( auto antibodies ) அதிகம் தென்படுவதை அறிய முடிகிறது.

3.ஈஸ்ட்ரோஜென் அதிகமாக இருப்பவர்களுக்கு ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்கள் எனும் ஹார்மோன்கள் அதிகமாக உருவாக்கப்படுவது புலனாகிறது . அதன் விளைவாக அதிக அளவில் உள்காயங்கள் (inflammation) ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

4. தீவிர மன அழுத்தமும் ( stress) உள்காயங்களை உருவாக்குவதில் அதீத பங்கு வகிக்கிறது.

இந்த எண்டோமெட்ரியோசிஸ்க்கு மருத்துவ அறிவியல் சிகிச்சை யாது?

1. மாதவிடாயின் போது ஏற்படும் அதீத வலிக்கான வலி நிவாரணிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது

2. ஹார்மோன் மாத்திரைகள்

ரத்தத்தில் ப்ரொஜஸ்ட்ரோன் அளவுகளைக்கூட்டி ஈஸ்ட்ரோஜென் அளவுக்குளைக் குறைக்கும் கருத்தடை மாத்திரைகள்..

ரத்த ஈஸ்ட்ரோஜெனை எதிர்த்து கட்டுப்படுத்தும் மாத்திரைகள் போன்றவை பரிந்துரைக்கப்படுகின்றன

3.அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை எடுக்கும் சிகிச்சை செய்யப்படுகிறது

மேற்சொன்ன மூன்றும் நிரந்தரமான தீர்வை வழங்கும் சிகிச்சைகள் அன்று.

எண்டோமெட்ரியோசிஸ் என்பது ஆட்டோ இம்யூன்வியாதியாக இருப்பதால் அந்த நோயை உண்டாக்கும் காரணியை நாம் களையாமல் நோயைக் கட்டுப்படுத்த இயலாது.

இந்த காரணத்தினால் தான் ஒரு முறை சாக்லேட் சிஸ்ட் எடுத்தாலும் மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இருப்பினும் கர்ப்பமாகக் காத்திருக்கும் பெண்களுக்கு அறுவை சிகிச்சை உடனடி பலனை தருகிறது. மகப்பேறு மருத்துவர் அறிவுரையின் படி அதை செய்து கொள்வது சிறந்தது.

இத்தகைய இந்த நோயை உணவின் மூலம் நம்மால் முடிந்த அளவு கட்டுப்படுத்த முடியுமா?

முடியும்…

ஆட்டோ இம்யூன் வியாதிகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.

ஆனால் நம் உணவு முறை , வாழ்க்கை முறை மாற்றங்களால் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும் என்பதை மருத்துவ அறிவியலும் ஆதரிக்கிறது.

1. உணவில் கோதுமை மற்றும் மைதாவில் அடங்கி இருக்கும் க்ளூடன்களை ஒரு வருடகாலம் தவிர்த்தால் இந்த நோய் தரும் அதீத வலி குணமாகிறது என்று பின்வரும் ஆய்வு கூறுகிறது.[1]

2. உணவில் ஒமேகா 3 எனும் கொழுப்பு அதிகமாக எடுப்பது எண்டோமெட்ரியோசிஸின் பிரச்சனைகளை குறைக்க உதவும் என்கிறது இந்த ஆய்வு. [2]

3. நாம் உண்ணும் உணவில் நேரடியான இனிப்பு , மறைமுகமான இனிப்பு இவற்றை குறைப்பது எண்டோமெட்ரியோசிஸ் நோயில் சிறந்த மாற்றத்தை தரும்[3]

4. உள்காயங்களை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்ட நட்ஸ் வகைகள் , பால் மற்றும் பால் பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது சிறந்த தீர்வை தரக்கூடும்[4]

5. இந்த நோயைப் பொறுத்தமட்டில் காபி அருந்துவதை நிறுத்தி விட்டு க்ரீன் டீ அருந்துவது சிறப்பான முடிவாக இருக்கும். [5]

6. இந்த நோயைப் பொறுத்த வரை சிகப்பு இறைச்சியை குறைப்பது பயன் தரும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

சிகப்பு இறைச்சியில் அதிகமான அளவு அரகிடானிக் அமிலம் (Arachidonic acid ) இருப்பதால் இது அதிக ஊறு செய்யும் ப்ராஸ்டாக்லான்டின்களை உருவாக்குகிறதாம். இதனால் உள்காயங்கள் அதிகமாக வாய்ப்புண்டு என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சிகள் அனைத்தும் அதிக மாவுச்சத்து உணவு முறையில் செய்யப்பட்டவை என்பதை வைத்துப்பார்த்தால் ,குறை மாவு உணவு முறையில் இறைச்சி பிரச்சனை தராது என்றே கொள்ளலாம்

எண்டோமெட்ரியோசிஸை நமது ஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவில் கண்ட்ரோல் செய்து வைத்திருக்கும் பெண்கள் உள்ளனரா?

பலர் உள்ளனர்.

பல சமயங்களில் தங்களின் வெற்றிக்கதைகளை குழுவில் பகிர்ந்துள்ளனர்.

எண்டோமெட்ரியோசிஸ்க்கான மாடல் டயட் சார்ட் இதோ. ( ஒவ்வொரு ஆளைப்பொறுத்தும் சிறிது மாறுபடலாம்)

காலை எழுந்ததும்

இனிப்பு பால் சேர்க்காத கிரீன் டீ

காலை உணவு

தேங்காய் 100 கிராமுடன்

3 முட்டைகள் உண்ணலாம்

மதியம்

200 கிராம் காய்கறிகள்

+ 100 கிராம் கீரைகள்

மாலை

க்ரீன் டீ ( இனிப்பு பால் சேர்க்காமல்)

இரவு

கோழி ( வாரம் மூன்று நாட்கள்)

ஒமேகா 3 நிரம்பிய சிறிய சைஸ் மீன்கள் ( வாரம் மூன்று நாட்கள்)

மட்டன் ( வாரம் ஒரு நாள்)

ஒமேகா 3 மீன் எண்ணெய் மாத்திரை தினமும் ஒன்று எடுக்கலாம் ( omega 3 fatty acid is an anti inflammatory)

பசுமஞ்சள்(curcumin is an anti inflammatory) தினமும் எடுக்கலாம்.

Night shade காய்கறிகள் என்று அழைக்கப்படும்

குடை மிளகாய், தக்காளி , வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இவை ஆட்டோ இம்யூனிட்டியை அதிகரிப்பவை என்று அறியப்பட்டுள்ளன.

ப்ராக்கலி/ காளிபிளவர்/ முட்டைகோஸ் போன்ற ப்ராசிக்கா குடும்ப காய்கறிகள் எண்டோமெட்ரியோசிஸ்க்கு நன்மை பயப்பவை. காரணம் இவை கல்லீரலை நன்றாக தூண்டி அதிகப்படியான ஈஸ்ட்ரோஜெனை வெளியேற்ற உதவுகின்றன.

தாவரங்கள் மூலம் வரும் மறைமுக ஈஸ்ட்ரோஜெனான phyto estrogen அடங்கிய சோயா, ஃப்ளாக்ஸ் விதை போன்றவற்றை இந்த நோய் பாதிக்கப்பட்ட பெண்கள் தவிர்க்கவும்.

Xeno estrogen என்பவை BPA அடங்கிய பிளாஸ்டிக் பாட்டில்கள் வழி வரலாம். எனவே BPA free பிளாஸ்டிக் உபயோகியுங்கள். அல்லது மாற்று முறைகளுக்கு மாறிவிடுங்கள் .

மன அமைதியாக வாழத்தேவையான பயிற்சிகள் செய்யுங்கள்.

துணையுடன் மனம் விட்டுப்பேசுங்கள். பாசிடிவாக யோசியுங்கள்.

இறைவன் நாடினால் கட்டாயம் குழந்தை பிறக்கும். எனவே குழந்தைப்பேறை நினைத்து அதிகம் கவலைப்படாதீர்கள். ரிலாக்ஸாக இருப்பது ரொம்ப முக்கியமானது.

தினசரி எட்டு மணிநேர உறக்கம். கட்டாயம் தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி

ஆட்டோ இம்யூன் பேலியோ உணவு முறை இந்த நோய் தரும் பெரும்பான்மை பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வரும்.

நிரந்தர தீர்வு ஏற்படாவிடினும் நிச்சயம் அன்றாட வாழ்வியலில் முன்னேற்றத்தை தரும்.

தினசரி வாழ்க்கை திறன்(Quality of Life) மேம்படும்

எடை குறைப்பு என்பது பல நேரடி மற்றும் மறைமுக நன்மைகளைத்தருவதாகும்.

எடை குறையும் போது தானாக சுய மதிப்பீடும் அதிகமாகிறது. தன்னம்பிக்கையும் அதிகமாகிறது. மன அழுத்தம் விலகுகிறது.

எனவே பேலியோ உணவு முறை எடை குறைப்பில் முக்கியத்துவம் பெறுகிறது.

குறைந்தபட்சம் ஒருவருட காலம் தொடர்ந்து சீட்டிங் இல்லாமல் இந்த உணவு முறையை கடைபிடித்து பார்த்த பின்னரே உண்மையான பலனை தந்ததா இல்லையா என்று கூற முடியும்.

பலன் தருமேயானால், அதையே வாழ்வியலாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

தியாகங்கள் செய்தே வரலாறு படைக்க முடியும்

உணவில் சில தியாகங்கள் செய்து எண்டோமெட்ரியோசிஸை அடக்கி ஆள முடியும்

நம்பிக்கையே வாழ்க்கை!!!

About The Author

The author, Dr. Dr Vinodhini Pradeep. is a Fertility Consultant at Care IVF. For an appointment with the doctor, call +91 96268 93006. Book a Consultation at Gheeth IVF.

BOOK A FREE CONSULTATION!

Are you Married and Facing Infertility Problems?

Book your appointment today!
Easy Zero Interest EMI Plans
No need to worry, your data is 100% Safe with us!
Click Here to Chat
Scan the code
Welcome to Gheeth IVF Hospital