fbpx
Gheeth IVF logo
9626893006
Open 10 am to 4 pm


“White

White discharge வெள்ளைப்படுதல் என்பது பருவ வயதை எட்டிய பெண்களில் பொதுவாக நார்மலான விசயமாக பார்க்கப்படுகிறது. ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் விளையாட்டால் மாதவிடாய் நிகழ்வுக்கு முன்பு வெள்ளைப்படுதல் இருக்கலாம்.

ஆயினும், white discharge பல மாதங்களாக தொடர்ந்து இருந்தாலோ அல்லது, தயிர் போன்று கெட்டிப்பட்டு வெள்ளைப்படுதல் இருப்பின் கேண்டிடா பூஞ்சைத் தொற்று (CANDIDA FUNGAL INFECTION) இருப்பதற்கான அறிகுறி அது.

அதுவே, வெள்ளைப்படுதலோடு கூடவே கெட்ட வாடை (FOUL SMELL) அடிக்குமானால் பாக்டீரியா தொற்று இருக்கக்கூடும். இத்தகைய சூழ்நிலையில், கட்டாயம், தகுந்த சிகிச்சை செய்து வெஜைனா எனும் யோனிப்பகுதியில் ஏற்பட்டுள்ள தொற்றை (VAGINAL INFECTION) குணப்படுத்த வேண்டும். இது குறித்த விழிப்புணர்வு பல வளர் இளம் பருவத்தினரிடமும், வளர்ந்த பெண்களிடமும் இல்லை

வெள்ளைப்படுதலை, முறையாக கவனிக்காமல் விட்டால், கர்ப்ப பையின் வாய் வழியாக தொற்று, கர்ப்ப பைக்குப் பரவி, நாளடைவில் நீண்ட நாள் கவனிக்காமல் விட்டால், சினைக்குழாய் அடைப்பை ஏற்படுத்தலாம் (FALLOPIAN TUBE BLOCK)

தொற்று, வயிற்றுப் பகுதிக்கும், பரவ வாய்ப்புண்டு. இது இடுப்பெலும்புக்குள் இருக்கும் பகுதி மொத்தத்திலும் அழற்சியை ஏற்படுத்தலாம். பெண்களுக்கு, வெள்ளைப்படுதலுடன் கூட, பின் பக்க இடுப்பு வலி (LOW BACKACHE) இருப்பது, தொற்று கர்ப்ப பைக்கும் இடுப்பெலும்புக்குள் இருக்கும் பகுதிக்கு (PELVIC INFLAMMATORY DISEASE) தொற்றுப் பரவல் நடந்திருப்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த நோய்க்கு முறையாக, மகப்பேறு மருத்துவரிடம் கூறி சிகிச்சை பெற வேண்டும். வெள்ளைப்படுதல் பற்றி ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 96268 93006 என்ற எண்ணிற்கு WHATSAPP செய்யவும்.

About The Author

The author, Dr. Dr Vinodhini Pradeep. is a Fertility Consultant at Care IVF. For an appointment with the doctor, call +91 96268 93006. Book a Consultation at Gheeth IVF.

BOOK A FREE CONSULTATION!

Are you Married and Facing Infertility Problems?

Book your appointment today!
Easy Zero Interest EMI Plans
No need to worry, your data is 100% Safe with us!
Click Here to Chat
Scan the code
Welcome to Gheeth IVF Hospital